காத்தான்குடி மீரா பாளிகா தேசிய பாடசாலை மாணவிகள் கெளரவிப்பு.

(எம்.எம்.றம்ஸீன்)   வரலாற்று சாதனை படைத்த காத்தான்குடி மீரா பாளிகா தேசிய  பாடசாலை  மாணவிகள் கெளரவிப்பு
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான சதுரங்க  போட்டியில் வரலாற்று சாதனை புரிந்த காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவிகளுக்கு பாடசாலை சமூகத்தினால் கெளரவம் அளிக்கப்பட்டது.
இம் மாணவிகளை கெளரவிக்கும் நிகழ்வானது கடந்த செவ்வாய்க்கிழமை  (08) காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை வளாகத்தில் அதன் அதிபர் அஷ்ஷெய்க் யூ.எல். மன்சூர் தலைமையில் இடம் பெற்றது .
காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவிகள் 2023.08.05 மற்றும் 2023.08.06ம் திகதிகளில் திருகோணமலை சிங்கள மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாண மட்ட சதுரங்க போட்டியில் திருகோணமலை விவேகானந்தா  வித்தியாலயம், மட்டக்களப்பு  வின்சன் உயர் தர பாடசாலை, திருகோணமலை சென் மேரிஸ் கல்லூரி, கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி , மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி  என்பனவற்றை  தோல்வியுறச் செய்து வரலாற்றில் முதன் முறையாக மாகாண மட்ட சதுரங்கம் (செஸ்) போட்டிகளில் முதலிடத்தைப் பெற்று சம்பியனாக தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளதையிட்டு இக் கெளரவம் அளிக்கப்பட்டது.
மாணவிகள் காத்தான்குடி குர்ஆன் சதுக்கத்தில் இருந்து பாடசாலை நோக்கி அழைத்துச் செல்லப்பட்னர்.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.எம்.எம்.அமீர்  அவர்களும் விசேட அதிதிகளாக உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் எம்.எல்.எம் முதர்ரிஸ்  அவர்களும் கோட்டக்கல்வி பணிப்பாளர்  ஏ.ஜி.எம் .ஹக்கீம்  மற்றும் வலயத்தின் சிறுவர் மெய்வல்லுனர் இணைப்பாளர் எஸ்.எல்.எச்-இனாமுல்லாஹ்  ஆகியோரும் கலந்து சிறப்பித்ததுடன் பாடசாலை ஆசிரியர்கள், அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் பங்குபற்றியிருந்தனர்.