(ஹஸ்பர்)
,கிண்ணியா குறிஞ்சாக்கேணி கமநல சேவைகள் பிரிவுக்குட்பட்ட காளிபாஞ்சான் நாவற்சோலை விவசாய நிலப் பகுதியில் நெல் அறுவடை தற்போது இடம் பெற்று வருகின்றது இருந்த போதிலும் இம் முறை சிறுபோகச் செய்கை அறுவடையில் பாரிய நஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இப் பகுதியில் சுமார் 300 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டு அறுவடை இடம் பெற்று வருகின்றது.
தங்களுக்கான நெல் கொள்வனவில் நிர்ணய விலை இன்மை ,வெட்டுக் கூலி அதிகம் விளைச்சல் குறைவு என பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தனியார் உரிமையாளர்களே நெல்லை கொள்வனவு செய்கின்றனர் நிர்ணய விலை இன்மையால் பாரிய நஷ்டம் இலாபமற்ற அறுவடை எஞ்சியுள்ளதாகவும் அரசாங்கம் இதற்கு சாதகமான பதில்களை விவசாயிகளுக்கு வழங்கி நிர்ணய விலையை அறிவிக்க வேண்டும் .
ஒரு ஏக்கருக்கு 15 வீதம் தொடக்கம் 20 வீதம் வரையே விளைச்சல் கிடைக்கிறது இது போதாது. எல்லாக் கூலிகளும் போக எஞ்சியிருப்பது ஒன்றுமில்லை நெல்லின் விலை ஒரு மூடை சாதாரணமாக 5000 ரூபா வரையே செல்கிறது இதற்காக அரசாங்கம் சரியான பதிலை தர வேண்டும் விவசாயத்தை நம்பியே நாங்கள் வாழ்கின்றோம் எனவும் தெரிவிக்கின்றனர். அரக்கொட்டியான் அடித்து ஒரு வகை மஞ்சல் நோய் தாக்கம் ஏற்பட்டதாளும் விளைச்சல் குறைவு .பசளை கிருமி நாசினி போன்றன தட்டுப்பாடு காரணமாகவும் மானிய அடிப்படையிலான விவசாயிகளுக்கான பசளையும் குறைவாகவே கிடைத்தன இதனால் வாழ்வா சாவா என்ற நிலைக்கு தள்ளப்பட்டு பரம்பரை பரம்பரையாக இவ் விவசாயத்தை செய்து வரும் நிலையில் தற்போது கைவிடுவோமா என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.அரசாங்க களஞ்சியசாலை பாலடைந்து காணப்படுகிறது எனவே நிர்ணய விலையை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.