முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மாதிரி சித்திரைப் புத்தாண்டு வைபவம்.

(எம்.எம்.றம்ஸீன்) மாணவர்களிடையே பல்லின மதக் கலாசார பண்பாட்டு விழுமியங்களை அறிந்து மதிக்கப் பழகிக் கொள்வோம்  எனும் கல்வி அமைச்சின் கலைத்திட்டத்திற்கு  அமைவாக  2023.08.09ம் திகதி கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபர் ஏ.ஜீ.எம்.றிசாத் அவர்களின் தலைமையிலும் ஆரம்ப பிரிவுப் பகுதித்தலைவர் டீ.கே.எம்.மௌசீன் அவர்களின் ஏற்பாட்டிலும் தரம் இரண்டு வகுப்பு மாணவர்களின் மாதிரிச் சித்திரைப் புத்தாண்டு வைபவம் இடம் பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் திட்டமிடலுக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி வரணியா சாந்த ரூபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
 இதன்போது தமிழ்,சிங்கள,  முஸ்லிம்  மக்களின் கலாசாரத்தையொட்டிய கிராமிய விளையாட்டுக்களும் உணவுப் பண்டங்களும் பரிமாறப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதி அதிபர் திருமதி எஸ்.ஜே.கபூர், இடைநிலைப் பகுதித்தலைவர் எம்.ரீ.ஏ.முனாப், மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களும்  பிரசன்னமாகியிருந்தார்கள்.