மாணவர்களுக்கு  தகவல் தொழில் நுட்பம் IT (கனனி)  அறிவைப் புகட்டுவதுக்கு விசேட நிகழ்ச்சி ஒளிபரப்பு.

(அஷ்ரப் ஏ சமத்)

 
பாடசாலைகளில் உயர்தரம் மற்றும் சாதாரண தரக்  கல்வியைக்  கற்று விலகிய மாணவர்களுக்கும் மற்றும், பல்கலைக்கழக மாணவர்களுக்கு  தகவல் தொழில் நுட்பம் IT (கனனி)  அறிவைப் புகட்டுவதுக்கு விசேட நிகழ்ச்சித் திட்டமொன்றை இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபணம் ஊடக தயாரிப்பு ஒளிபரப்புவதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
 
இந் நிகழ்ச்சித் திட்டத்தினை  உடன் ஆரம்பித்து வைக்குமுகமாக ஊடக அமைச்சில்  விசேட நிகழ்வு ஒன்று இன்று 09. அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தலைமையில்   நடைபெற்றது.
.
இந் நிகழ்வுக்கு விஞ்ஞான தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கானக்க கேரத்,  இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின்  புதிய தலைவர் கலாநிதி  பிரசாத் சமரசிங்க, மொரட்டுவைப் பலக்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி விசாக்கா நாணயக்கார மற்றும் Freelancer பிரிலான்சர் நிறுவனம், ICTA ஜ.சி.ரீ.ஏ Public Utilities Comission (PRO +) பொது பயண்பாடு மானிட நிறுவனம், என்.வி.கியு போன்ற நிறுவனங்களது அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இக் கலந்துரையாடலில் – இலங்கையில்  உள்ள பாடசாலைக் கல்வியை விட்டு விலகியோர்கள் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்களை  மின்னியல், பொருத்துதல் நீர்க்குழாய் பொருத்துனர், சூரிய சக்தித் திட்டத்தினை பொருத்தும் துறையினரை இணைத்துக் கொள்ள இத் நிகழ்ச்சித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இலங்கையில்  இத்துறை சார்ந்த தொழில்நுட்ப ஊழியர்கள் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் இணைந்துள்ளனர்..
 இவர்களை இத்துறையில் இணைத்து நவீன  தகவல் தொழில் நுட்பம் ஊடாக தமது தொழிலை விருத்தி செய்து இவர்களுக்கு என்.வி.கியு 3 தரச் சான்றிதழ் பரீட்சையில் ஈடுபடுத்தி சான்றிதழ் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
. இத்துறையில் கடந்த காலங்களில் இணைத்துக் கொண்டவர்கள்.  தொழில்களைப் பெற்றுள்ளனர்.  வேறு சிலர் வெளிநாடுகளுக்கும் சென்று தொழில் செய்வதாகவும் அதிகாரிகளினால் அமைச்சருக்கு  தெரிவிக்கப்ட்டது .இந் நிகழ்ச்சித் திட்டத்திற்காக இலங்கையில் உள்ள  மின்னியல்,நீர்குழாய் பொருத்துதல், சம்பந்தப்பட்ட தனியார்த்துறைக்  கம்பனிகளும் இந் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அனுசரனை வழங்குகின்றனர்.  எவ்வித  அடிப்படைத்  கல்வி,தொழில்நுட்ப தகுதியில்லாமல் இத் தொழிலை சுயமாக செய்து வருபவர்களும் இந் நிகழ்ச்சியில் இணைந்து கொள்ள முடியும். அத்துடன இத்தகையவர்களுக்கு கனனி அறிவுடனும் தகவல் தொழில்நுடப் அறிவினையும்  நிகழ்ச்சி ஊடகாப் புகட்டி ஒர் சிறந்த தொழில்நுட்ப வல்லுனராக நாட்டுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கும்  வளப்படுத்துவதே இந் நிகழ்சித் திட்டத்தின் நோககமாககும்  என அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டது. எதிர்காலத்தில்  இந் நிகழ்ச்சிகள் கட்டிட நிர்மாணத்துறையிலும் மேலும் விருத்தி செய்யப்படும்.
 
இந் நிகழ்ச்சிகள் IT  ஆகஸ்ட் 12 ஆம் திகதி  பி.பகல் 04.30  .அத்துடன்  ஆகஸ்ட் 13 ஆம் திகதி  Freelancer பிரிலான்சர்  நிறுவனததின் நிகழ்ச்சித் திட்டம்  ஆகஸ்ட் 13ஆம் திகதி  பி.பகல் 0430ககு ஆரம்பமாகும் ஒவ்வொரு சனி ஞாயிறுகளில இலங்கை ருபாவாகினிக் கூட்டுத்தாபணத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பில் பி.பகல் 04.30 மணிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்.  பொது பயண்பாடு மாணிட கமிசனின் PRO +நிகழ்ச்சித் திட்டம் என்.விகியு 3 திட்டம் ஆகஸ்ட்  13 ஆம் திகதி காலை 10.30க்கு ஆரம்பமாகும். எனவும் இலங்கை ரூபாவாகினித் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள்  இக் கூட்டத்தில் தெளிவுபடுத்தினார்கள்
இந் நிகழ்ச்சித் திட்டத்தில் இலங்கையில் உள்ள கல்வியமைச்சுடன் இணைந்து தொழில்நுட்ப பாடங்களை கற்பிக்கும் பாடசாலைகள் மற்றும் தனியார் அரச தொழில்நுட்ப மாணவரக்ளையும் எதிர்காலத்தில் இணைத்துக் கொள்வதற்கும் லேக்ஹவுஸ் பததிரிகைகளான தினமின, தினகரன் போன்ற பத்திரிகைகளில்  இவ் நிகழ்ச்சித் திட்டத்திற்கான  செய்திகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறும்  ஊடக அமைச்சின் செயலாளர்க்கு அமைச்சர்  பந்துல குணவர்த்தன  அறிவுறுத்தல் வழங்கனார்.