விசேட தேவையுடையவர் ஒருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு.

(க.ருத்திரன்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் காயான்கேணியில் இன்று செவ்வாய் கிழமை (8) விசேட தேவையுடையவர்  ஒருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
காயான்கேணி வட்டவானைச் சேர்ந்த இ.இரத்தினவேல் வயது 47 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று நன்பகல் வேலை அருகில் உள்ள கடற்கரைப் பகுதிக்கு சென்று வீடு திரும்பும் வழியில் இராலோடைக்கும் வட்டவான் ஆகிய இரு கிரமங்களுக்கிடையில் ஊடறுத்துச் செல்லும் ஆற்றினை கடந்து வரும் போது இவர் உயிரிழந்துள்ளார். திடிரென அவருக்கு ஏற்பட்ட வலிப்பு நோய் காரணமாக நீரினுள் வீழ்ந்து மூச்சுத் தினறி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கினறனர். நேரமாகியும் வீடு திரும்பாமை குறித்து உறவினர்கள் தேடிய போது குறித்த ஆற்றுப் பகுதியில் அவரது சடலம் கண்டு பிடிக்கப்பட்டது.சடலம் பொலிசாரின் உதவியுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக உறவினாகள்; தகவல் தெரிவித்தனர்.