கல்முனையில் கணவனை இழந்த பெண்ணுக்கு வீடு வழங்கி வைப்பு

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கீழ்   பாண்டிருப்பில்  வசித்து வரும் கணவனை இழந்த மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவருக்கு 15 இலட்சம் ரூபா பெறுமதியான வீடு (07)  கையளிக்கப்பட்டது.

சென்றல் பினான்ஸ் கல்முனை முகாமையாளர்  ரி. அனோஜ்
தலைமையில் நடைபெற்ற  இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஜே.அதிசயராஜ் கௌரவ அதிதியாகவும்  கலந்து கொண்டு பயனாளியிடம் வீட்டை கையளித்தனர்

சென்ட்ரல் பினான்ஸ் நிறுவனத்தின்  வடக்கு – கிழக்கு பிராந்திய அலுவலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின்  நிதி பங்களிப்பில் இந்த வீடு நிர்மாணிக்கப்பட்டது.

கல்முனை இராணுவ முகாம் கட்டளை அதிகாரி உதித்த களுவாராச்சி சிறப்பு அதிதியாக  கலந்து கொண்டதுடன் சென்றல்
பினான்ஸ்  வடக்கு – கிழக்கு  பிராந்திய முகாமையாளர் பாலசுந்தரம் கமலநாதன், முன்னாள் பிராந்திய விற்பனை முகாமையாளர் அறுமுகம் சிறிதர்,  பிராந்திய விற்பனை முகாமையாளர்களான பிரதிப் பத்தமராசா, அன்ரனி சிவராஜா உட்பட  முகாமையாளர்கள் பிரதேசத்தில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலர் இதில் கலந்து கொண்டனர்.