13யை அதன் அசல் வடிவத்தில் நடைமுறைப்படுத்துங்கள்.

ஐனநாயக தமிழ் தேசியக் கூட்டணி  ஜனாதிபதிக்கு கடிதம்
(வேதாந்தி)
நாங்கள் 5கட்சிகளை உள்ளடக்கிய ஒரு கூட்டணியாகும் 13வது திருத்தம் தொடர்பான தங்களின் கடிதத்திற்கு அமைய நாம் பின்வரும் கோரிக்கையினை முன்வைக்கின்றோம்.
13A ஏற்கனவே அரசியலமைப்பில் இணைக்கப்பட்டு நாடாளுமன்ற தேர்தல்களும் நடாத்தப்பட்டன.இருப்பினும் சில அதிகாரங்கள் திரும்பப்பெறப்பட்டன.மாகாணசபைகளிலிருந்து  விலக்கிக்கொள்ளப்பட்ட  அதிகாரங்களை மீண்டும் நிறுவுவதற்கும் காணி பொலிஸ்  நிதி மற்றும் நிருவாக அதிகாரங்களுடன் 13A அதன் அசல் வடிவத்தில் நடைமுறைப்படுத்துவதற்கும் நாங்கள் முன்மொழிகின்றோம் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.