மண்முனை தென்மேற்கில் இரண்டாவது சைவப்புலவர்

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட சைவப்புலவர் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் அரசடித்தீவு கிராமத்தில் வதியும் மூத்ததம்பி சிவகுமாரன் சித்தியடைந்துள்ளார்.
குறித்த பரீட்சைக்கான பெறுபேறு அண்மையில் வெளியாகி இருந்தது. இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருவரே சித்தியடைந்துள்ளனர்.
குறித்த பரீட்சையில் சித்தியடைந்த மூ.சிவகுமாரன் ஓய்வு பெற்ற அதிபரும், கவிஞருமாவார். இதுவரை மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் இருவரே சைவப்புலவர் பரீட்சையில் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.