( அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்வி அமைச்சின் சுற்று நிருபத்தின் பிரகாரம் மொழிகள் மேம்பாட்டுத் தரவட்டத்தின் ஏற்பாட்டுக்கமைவாக மும்மொழிகளிலும் மாணவர்களின் செயற்பாடுகள் பாடசாலை நிகழ்வுகளில் முன்னெடுத்துச் செயற்படவேண்டும் என்பதற்கமைய அட்டப்பள்ளம் ஸஹீதா வித்தியாலயத்தில் கடந்த திங்கட் கிழமை ( 7 ) நிகழ்வொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
பாடசாலை அதிபர் .எல்.எம்.ஜின்னா தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மேற்படி நிகழ்வினை சிங்கள பாட ஆசிரியையான திருமதி எப்.ஆர்.சாதிக், ஆங்கில பாட ஆசிரியர் எஸ்.எம்.ஐ. சரபுல்லாஹ் ஆகிய ஆசிரியர்களின் நெறிப்படுத்தலில் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்வின் போது அண்மையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியின் மைதான நிகழ்வுகளில் மாணவர்களின் திறமைகளை இனம்கண்டு அவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சியளித்து மாணவர்கள் வெற்றிக்கு உழைத்த விளையாட்டுக்கு பொறுப்பான ஆசிரியர் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் முஹம்மட் அஸ்ஜத் மௌலானா ஆகியோர் பாடசாலை சமூகம் சார்பாக கெளரவிக்கப்பட்டனர்.