மீண்டும் தம்பிலுவில் திருக்கோவில் பிரதேசத்தில் கடலரிப்பு அதி தீவிரம்!

( வி.ரி. சகாதேவராஜா)
 திருக்கோவில் பிரதேசத்துக்கு உட்பட்ட தம்பிலுவில், திருக்கோவில்  பிரதேசங்களில் பாரிய கடலரிப்பு மீண்டும் ஏற்பட்டுள்ளது.
 நேற்றைய தினம் தம்பிலுவில் குருகுலம் பகுதியில் பாரிய கடலரிப்பு மிகவும் தீவிரமாக இருந்தது .

நேற்று அங்கு பல தென்னை மரங்களை கடல் காவு கொண்டிருக்கின்றது.
 மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றார்கள்.மீனவர்கள்  கடலுக்கு செல்ல முடியாதுள்ளது. அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
 சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து கவனம் எடுப்பார்களா என்று மக்கள் வினவுகின்றார்கள்