ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை-குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பள்ளவக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை- தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த அப்துர்ரஹ்மான்-அன்சார் (சுஜா) (31வயது) எனவும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியதில் இவ்விபத்து இடம் பெற்றதாக குச்சவெளி பொலிசார் தெரிவித்தனர்.
சடலம் விபத்துக்குள்ளான இடத்தில் காணப்படுவதாகவும்
விபத்து தொடர்பில் குச்சவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமைையும் குறிப்பிடத்தக்கது.