கொங்கிரீட் கற்களுடன் கடலில் கவிழ்ந்த கப்பல்

யாழ் ஊர்காவற்துறை கண்ணகை அம்மன் ஆலய துறைமுகத்தில் இருந்து அனலைதீவுக்கு கொங்கிரீட் கற்களை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று கடலின் பகுதியளவில் மூழ்கியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதுடன் இதன்போது கப்பலில் வேலை செய்யும் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

எனினும் வேறு எவருக்கும் அசம்பாவிதங்கள் ஏற்படாதபோதிலும் கப்பலை மீட்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.