ரயிலில் மோதி பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் புங்கன்குளம் ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

அரியாலை பகுதியை சேர்ந்த 27 வயதான பெண்ணொருவரே விபத்தில் மரணித்தார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று (05) மதியம் கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை போலீசார் முன்னெடுத்துள்ளனர்.