நிலாவெளியில் புலமைப் பரிசில் வழிகாட்டி நூல் வழங்கல்..!

(அ . அச்சுதன்)


  திருகோணமலை மாவட்டத்திலிருந்து ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் தேர்வுக்குத்  தோற்றும் மாணவரது    பெறுபேறுகளை உயர்த்தும் நோக்கோடு குச்சவெளிக்  கோட்டத்தில் உள்ள  நிலாவெளி உரோமன் கத்தோலிக்கத்
  தமிழ்க்  கலவன்   பாடசாலையில் கல்வி பயிலும் ஐம்பது ஐந்தாம் வகுப்பு மாணவருக்கு ஒவ்வொன்றும் 1680 ரூபா  விலையான ஞானோதயம் என்னும் புலமைப்பரிசில் தேர்வு வழிகாட்டி நூல் நேற்று  ( 04  )  வழங்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் சண்முகம் குகதாசன்,செயலாளர்  கணபதிப்பிள்ளை சிவானந்தன் ஆகியோர்  இவற்றை வழங்கி வைத்தனர்.  பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்,முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்  ஜெ.நிமலகாசன் ஆகியோரும்  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.