இலங்கையில் அகப்பட்ட அரிய வகை மீன்

பொலன்னறுவையில் அரிய வகை மீன் இனம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

பெலெட்டியா ஏரியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவருக்கு சுமார் இரண்டரை அடி நீளமுள்ள இந்த மீன் அகப்பட்டுள்ளது.

நேற்று மாலை இவ் மீன் வலையில் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். தினசரி மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபடும் எச்.எம். விமலரத்ன என்பவரே இதனை கண்டுபிடித்தார்.