வைத்தியசாலைக்கான காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு!

(அபு அலா)  அட்டாளைச்சேன தள ஆயுர்வேத வைத்தியசாலைக்கான காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு, நேற்று வியாழக்கிழமை (03) பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

 

அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் நஹீஜா முஷாபிர் குறித்த வைத்தியசாலைக்கான காணி உறுதிப்பத்திரத்தை கிழக்கு மாகாண சுதேச மருத்துவத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதரிடம் வழங்கி வைத்தார்.

 

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய ஆயுர்வேத வைத்தியசாலகளின் இணைப்பாளரும், வைத்திய அத்தியட்சகருமான வைத்தியர் எம்.ஏ.நபீல், அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஐ.எல்.அப்துல் ஹை ஆகியோருடன், காணி உத்தியோகத்தர் எம்.எம்.றியாத், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் எஸ்.ஜே.தேவநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.