வெல்லாவெளியில் காணி நடமாடும் சேவை.

   (எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளிப் பிரதேசத்தில் வாழும் மத்திய தர  வர்க்க மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளின்  பிரச்சினைகளைத்  தீர்த்து வைக்கும் நடமாடும் சேவை போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (03) பிரதேச செயலாளர் சோமசுந்தரம்  ரங்கநாதன்  தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது மாலையர்கட்டு மற்றும் சின்னவத்தை பிரதேச பயனாளிகள் கலந்துகொண்டு தமது காணிகளின் உரிமம், உரித்து மற்றும் காணிகளின்  ஆவணங்கள் போன்ற பிணக்குகள் தொடர்பான  தீர்வைப் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் டி. எம்.ஆர்.சி. தசநாயக்க, உதவிப் பிரதேச செயலாளர்  வி. துலாஞ்சனன் மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலக காணிக் கிளை உத்தியோகத்தர்கள் எனப் பலர்  கலந்து கொண்டனர்.