(அ . அச்சுதன்) கிழக்கு மாகாண ஆளுநர் அவர்கள், திருகோணமலை மாவட்ட முன்னாள் நகர சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களை. ஆளுநரின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் சந்திப்பை ஏற்படுத்தினார்.
பிரதேசத்திலுள்ள மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தபோது திருகோணமலை நகர சபையின் முன்னாள் உறுப்பினர். சி. சிவகுமார். ஆளுநரிடம் நகர சபை. பிரதேச சபையின் வருமானம் ஈட்ட கூடிய சொத்துக்களை பிற அரச நிறுவனங்கள். கையடக்கபடுதியதோடு அதன் வருமானங்களையும் பெறுகின்றன. இந்த வரிசையாக திருகோணமலை நகரசபை பகுதிக்குள் மொத்த மீன் சந்தை. வாடி வீடு. உப்புவெளி பிரதேச சபை பகுதி கன்னியா சுடுதண்ணீர் கிணறு. மாவில் பீச்.குச்ச வெளி பிரதேச சபையின் பகுதி புறாமலை செல்லும் நிலாவெளி கடற்கரை. இதுபோன்ற பல இடங்கள் மீட்கப்பட்டு. உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் கொண்ட வரபடவேண்டுமென கோரிக்கையை முன் வைத்தார்.