ஆளுநர் தலைமையில் கல்லாறு சதீஸின் நூல்வெளியீட்டுவிழா

கலாநிதி கல்லாறு சதீஸ் எழுதிய பனியும் தண்டனையும் புலம்பெயர் சிறுகதைகள் நூல்வெளியீட்டுவிழா நாளை சனிக்கிழமை (05.08)  மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயத்தில்  மாலை 05மணிக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெறவுள்ளது.

நிகழ்வுக்கு பிரதமவிருந்தினராக  திரைப்பட தயாரிப்பாளரும், பதிப்பாளருமான  சென்னையைச்சேர்ந்த மு.வேடியப்பன் கலந்துகொள்ளவுள்ளார்.