(எம்.எஸ்.எம்.ஸாகிர்) இவ்வாண்டின் (2023) தேசிய மீலாத் விழா எதிர்வரும் செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி வியாழக்கிழமை மன்னார் மாவட்டத்தில் நடாத்தப்படும்.
புத்தசாசன சமய விவகாரங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரம நாயக்கவின் தீர்மானத்திற்கமைய தேசிய மீலாத் விழா கொண்டாட்டங்களுக்கென மன்னார் மாவட்டம் தெரிவாகியுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் எங்கு தேசிய மீலாத் நிகழ்வுகளை நடாத்துவது என்பது தொடர்பில் ஆராய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப்பணிப்பாளர் பைசால் ஆப்தீன் தலைமையில் அதிகாரிகள் குழு ஒன்றும் மன்னார் மாவட்டத்திற்கு களவிஜயமொன்றினை மேற்கொண்டனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், பிரதமர், அமைச்சர்கள், சபாநாயகர், பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டுத் தூதுவர்கள், ராஜதந்திரிகள், உலமாக்கள், புத்திஜீவிகள் எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.