இரண்டு வருடங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் சேவை புரிந்த பிரிகேடியர், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்களினால் கெளரவிக்கப்பட்டார்.கோவிட்-19, எரிபொருள் தட்டுப்பாடு போன்ற நெடுக்கடியான காலங்களில் இவர் மாவட்ட செயலகத்துடன் இணைந்து சேவையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரிகேடியர் திலுப்ப பண்டார மாவட்டத்தின் மக்கள் மத்தியில் நல்லுறவை ஏற்படுத்துவதற்காக அயாராது பாடுபட்டதுடன் இயற்கை விவசாயத்தினை இராணுவத்தினர் மூலம் மேற்கொண்டு உற்பத்திகளை மக்களுக்கு வழங்கியிருந்தார்.
இராணுவத்தில் 32 வருடங்கள் சேவையாற்றிய பிரிகேடியர் உயர் கல்வியை தொடர்வதற்காக வெளிநாடு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, உதவி மாவட்ட செயலாளர் ஆ. நவேஸ்வரன் மற்றும் பதவிநிலை அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.