மத்ரஸா பொறுப்பாளர்களுக்கு இரு நாள் செயலமர்வு.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)  முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி ஏற்பாடு செய்த முஸ்லிம் மத்ரஸா பொறுப்பாளர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வு சாய்ந்தமருது தனியார் விடுதியில் (3) ஆரம்பமானது.

“எதிர்காலத்தில் மத்ரஸா கல்வியை வெற்றிகரமாக முன்னெடுத்தல்” எனும் தொனிப் பொருளில் நடைபெற்ற இந்த விசேட செயலமர்வில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறை, நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை ஆகிய பிரதேசங்களில் உள்ள மத்ரஸாக்களின் பொறுப்பு அதிபர்கள், உஸ்தாதுமார் கலந்து கொண்டனர்.

முஸ்லிம் மதரசாக்களில் எதிர்காலத்தில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில்  மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் மற்றும் பாடத்திட்டங்களில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து வளவாளர்களாக கலந்து கொண்ட கலாநிதி றவூப் செயின், சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க்.அன்ஸார் பழீல் மெளலானா ( நழீமி) ஆகியோர் இங்கு விளக்கமளித்தனர்.