(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் முதியோர் தேசிய செயலகத்தின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவின் சேற்றுக்குடாவில் முதலாவது திரிய பியச முதியோருக்கான வீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக பிரதேச செயலாளர் வி. வாசுதேவனின் மேற்பார்வையில் மாவட்ட முதியோர் மேம்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் விஷ்வகோகிலனின் எற்பாட்டில் சமூக சேவை உத்தியோகத்தர் பி.ராஜ்மோகன் தலைமையில் இன்று(02) அடிக்கல் நடப்பட்டது.அதற்கிணங்க சமூக பாதுகாப்பு கிடைக்க வேண்டிய முதியவர்கள் வாழும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான வீடமைப்பு நிகழ்ச்சித் திட்டம் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் இடம் பெறுகின்றது.
60 வயதுக்கு மேற்பட்ட மாதாந்த வருமானம் 6000 ரூபாய்க்கு குறைவாக பெறும் முதியோருக்கான வீட்டை நிர்மாணிப்பதற்கு அல்லது திருத்துவதற்கு தேசிய செயலகத்தினால் 7 இலட்சம் பெறுமதியான நிதியுதவியுடன் வீட்டின் நிர்மாணப் பணிகள் நடை பெறுகின்றன.
இந் நிகழ்வில் முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உதவியாளர் திருமதி. நிலக்ஷி நிரூஷன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.