சர்வதேச அன்ஸான் கிளஸிக் போட்டியில் இலங்கை அபாகஸ் மாணவர்கள் சாதனை.

(அஸ்ஹர் இப்றாஹிம்)   இலங்கையிலிருந்து ஜப்பான் டோக்கியோ நகரிலுள்ள யூத் ஒலிம்பிக் நிலையத்தில் கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்ற சர்வதேச அன்ஸான் கிளஸிக் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை ICAM அபாகஸ் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
இலங்கையிலிருந்து கலந்துகொண்ட 14 மாணவர்களில் ஒரு முதலிடமும், இரண்டு இரண்டாம் இடங்களும், 11 மூன்றாம் இடங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.
திருமதி.ஸுக்றா ஸஹ்பி மற்றும் ரீ.எம்.ஸஹ்பி ஆகியோரின் வழிநடத்தலில் இவ்வாறான வெற்றி கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.