வைத்தியசாலையில் நிலவும் மருந்து தட்டுப்பாடு தீர்க்கப்பட வேண்டும்.

( வாஸ் கூஞ்ஞ) மன்னார் மாவட்டத்தின் பொது வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு காரணமாக நோயாளர்கள் பெரும் அசௌரியங்களுக்கு உள்ளாகி வருவதை மன்னார் மறைமாவட்ட ஆயர் சம்பந்தப்பட்ட சகலருக்கும் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஐனாதிபதிக்கும் , சுகாதார அமைச்சருக்கும் மற்றும் செயலாளர் சுகாதார தெரிவுக்குழுவிற்கும் இது தொடர்பாக கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்  பாரிய பிரச்சனையில் ஒன்றாக மருந்து தட்டுப்பாடு மற்றும் தட்டுப்பாடு காரணமாக இங்கு நிலவும் பிரச்சனைகள் தொடர்பில் மாவட்;ட முக்கியஸ்தர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கு இந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் சுட்டிகாட்டிய ஒரு பிரச்சனையாக அமைந்துள்ளது.

உயிர்காக்கும் மருந்துகள் , மருந்துகளுக்கு குறிப்பாக தீவிர சிகிச்சை மற்றும் சத்திரசிகிச்சை பிரிவுகள் மற்றும் சிறுநீரக மற்றும் குழந்தைகள் பராமரிப்பு பிரிவுகளில் பெரும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.

பெரும்பாலான மருந்துகள் சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவினால் வழங்கப்படுகின்ற போதிலும், இவை போதுமானதாக இல்லை எனவும்  குறிப்பிடப்படுகின்றது.

இந்த மருந்து தட்டப்பாடு , பற்றாக்குறை காரணமாக சிறுவர்கள், வயோதிபர்கள் , கற்பிணித் தாய்மார்கள், சிறுநீரக நோயாளிகள் , அதி தீவிர சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறவர்கள் பாதிக்கப்படுகிறாரகள்.

எனவே உங்களுடைய மேலான கவனத்தினை செலுத்தி இவ் பிரச்சனைக்கு தீர்வினை கண்டுகொள்ள வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என ஆயரால் ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு  சுட்டிக்காட்டப்பட்ட கடிதப் பிரதி வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கும் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து அவரும் சம்பந்தப்பட்டவர்களான மேன்மை தங்கிய ஐனாதிபதிக்கும் , சுகாதார அமைச்சருக்கும் மற்றும் செயலாளர் சுகாதார தெரிவுக்குழுவின் செயலாளர் ஆகியோரின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.