கபடி போட்டியில் பட்டிருப்பு தேசிய பாடசாலை தேசிய மட்டத்திற்கு தெரிவு.

(அஸ்ஹர்  இப்றாஹிம் )   கிழக்கு  மாகாண கல்வித் திணைக்கள விளையாட்டுப் பிரிவு ஒழுங்கு செய்திருந்த ,கிழக்கு மாகாண மட்ட கபடி போட்டியில்    பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை )  களுவாஞ்சிகுடி, 20 வயது பிரிவு பெண்கள் அணி தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
 நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த திங்கள்,   செவ்வாய்க் கிழமைகளில் நடைபெற்று முடிந்த மேற்படி கபடி போட்டிகளில் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 61 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
20 வயதிற்குட்பட்ட  பெண்களுக்கான கபடி போட்டியில் கந்தளாய் மத்திய மகா வித்தியாலயம் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டது.
20 வயதிற்குட்பட்ட  பெண்களுக்கான கபடி போட்டியில் 11 பாடசாலை மாணவிகள் பங்கேற்றிருந்தனர்.
பட்டிருப்பு தேசிய பாடசாலை 17 வயதிற்குட்பட்ட பெண்கள் அணி நான்காம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.