நாவிதன்வெளி புதிய பிரதேச செயலாளராக ராகுலநாயகி கடமையை பொறுப்பேற்றார்.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலாளராக செல்வி. ராகுலநாயகி இன்று (02.08.2023) தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இலங்கை நிர்வாக சேவை முதலாம் தர அதிகாரியான இவர் இதற்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ளாவளி பிரதேச செயலாளராக சுமார் ஐந்து ஆண்டுகள் கடமையாற்றியிருந்தார்.  வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உதவி பிரதேச செயலாளராகவும் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

நாவிதன்வெளி பிரதேச செயலாளராக கடமையாற்றிய எஸ். ரங்கநாதன் வெள்ளாவளி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடமையேற்பு நிகழ்வில் நாவிதன்வெளி உதவி பிரதேச செயலாளர் பி. பிரணவரூபன், கணக்காளர் கே.றிஸ்வி யஹ்சர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. திலகராணி கிருபைராசா, நிர்வாக உத்தியோகத்தர் கே. யோகேஸ்வரன், சமூர்த்தி தலைமை பீட முகாமையாளர் எஸ்.சிவம் உட்பட அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.