வெல்லாவெளி பிரதேச செயலாளராக எஸ்.ரங்கநாதன் கடமையை பொறுப்பேற்றார்

ஏ.எல்.எம்.ஷினாஸ்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் போறதீவுபற்று – வெல்லாவெளி பிரதேச செயலாளராக எஸ். ரங்கநாதன் இன்று (02) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இலங்கை நிர்வாக சேவையில் முதலாம் தர அதிகாரியான இவர் 2017 ஆம் ஆண்டு தொடக்கம் 6 ஆண்டுகள் அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலாளராக கடமையாற்றிய நிலையில் பொது நிருவாக  இடமாற்ற கடிதத்திற்கு அமைய போறதீவுபற்று புதிய பிரதேச செயலாளராக கடமைப் பொறுப்பேற்றுள்ளார்.

1977ம் ஆண்டு பிறந்த எஸ்.ரங்கநாதன் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் உயிரியல் விஞ்ஞான பட்டதாரியாவார். 2006 ம் ஆண்டு இலங்கை நிருவாக சேவை போட்டிப் பரீட்சையில் சிந்தியடைந்தார். இவர் இதற்கு முன்னர் ஓட்டமாவடி, செங்கலடி, களுவான்சிக்குடி ஆகிய பிரதேச செயலகங்களில் உதவிப் பிரதேச செயலாளராகவும் மட்டக்களப்பு மாவட்ட உதவிச் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

கடமையை பொறுப்பேற்கும் நிகழ்வில் நாவிதன்வெளி மற்றும் போரதீவுபற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.