அம்பாறை திருவிழாவில் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோஸ்தர்களைத் தாக்கிய படை வீரர் உட்பட அவரது நண்பர்கள் இருவர் கைது

அஸ்ஹர்  இப்றாஹிம்)
அம்பாறை வீரசிங்க விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற திருவிழா நிகழ்வின் போது பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த அம்பாறை பொலிஸ் நிலைய குற்றவியல் பிரிவின் உப பொலிஸ் உத்தியோஸ்தர் மற்றும் பொலிஸ் உத்தியோஸ்தரை தாக்கிய படை வீரரையும் அவரது நண்பர்கள் இருவரையும் அம்பாறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருவிழா பூமியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற முறுகல் நிலமையை சமரசம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் மீது மதுபோதையிலிருந்த குழுவினர் தாக்கியுள்ளனர்.
பலத்த காயங்களுக்குள்ளான இரு பொலிஸ் உத்தியோஸ்தர்களும் சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இந்த தாக்குதல் சம்பந்தமாக நடவடிக்கை மேற்கொண்டிருந்த அம்பாறை பொலிஸார் அம்பாறை சுதுவெல பகுதியில் 32 வயதுடைய இளம் படை வீரரையும் அவரது நண்பர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக அம்பாறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.