(ஹஸ்பர்) “Marine Mile Challenge” என்ற தலைப்பில் Trinco Aid நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நீச்சல் பயிற்சி போட்டி நடைபெற்றது. Yana Swimming Academy இனால் ஒழுங்கு செய்யப்பட்டு அங்கு பயிற்சி பெறும் 18 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கான போட்டி (01) நடைபெற்றது.
திருகோணமலை வைத்திய சாலை அண்மித்த கடற்கரையில் இருந்து சல்லி முனை வரையிலான (திருகோணமலை – சல்லி) 14 கிலோமீட்டர் தூரத்தினை நீந்தி கடக்கும் முயற்சியில் இப்போட்டி நடாத்தப்பட்டது. காலை 08.30 மணிக்கு ஆரம்பமான இப்போட்டி மதியம் 01.00 மணி அளவில் நிறைவடைந்தது.
இப்போட்டியிற்கான நிதி மற்றும் சான்றிதழ், கேடயங்களை வீரர்களது பெற்றோர்கள், Trinco Aid நிறுவனம், Lions club of Trincomalee Town, Lion club of trincomalee Centennial paradise ஆகியோர் வழங்கி வைத்தனர்.
.
இப் போட்டியினை நடத்த சிறுவர்களை ஒழுங்கமைத்து சிறந்த முறையில் பயிற்சிகளை வழங்கி எம்மோடு தொடர்ந்து பயணித்து வருகிறார் திரு. நந்தன விஜயலால் (Yana Foundation Director) அவர்கள். அவர்களுக்கும் எமது நன்றிகள்.
எமது பிள்ளைகள் பாதுகாப்பிற்காக எம்மோடு இணைந்து செயற்பட்ட இலங்கை செஞ்சிலுவை சங்க தொண்டர்கள் கலந்து கொண்டனர்
இவ் நிகழ்வில் கிழக்கு மாகாணா சுற்றுலா பணியகத்தின் தவிசாளர் ஏ.பி.மதனவாசன் அவர்களும், Lion கழகத்தின் உறுப்பினர்கள், Trinco Aid இன் நிறுவனர், பணிப்பாளர், நிகழ்சி முகாமையாளர், பயிற்சியாளர்கள், இலங்கை செஞ்சிலுவை சங்க தொண்டர்கள், பெற்றோர்கள், ஊடகவியலாளர்கள், தன்னார்வளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இன்றைய கடல் வழி நீச்சல் போட்டியில் 13 சிறுவர்கள் பங்குபற்றினர்.
போட்டியின் தூரத்தினை ஆறு சிறுவர்கள் முழுமையாக கடந்து சாதனை படைத்தனர். மற்றும் சிலர் தங்களால் நீந்த முடிந்த தூரத்தினை அடைந்து தங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்தர்.
இறுதி நிகழ்வாக சல்லி கிராம மக்கள் இவ் வீரர்களை வரவேற்றனர். தொடர்ந்து வீரர்களுக்கான சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கி வைக்கப்பட்டது. அதனை அடுத்து சல்லி அம்மன் கோவில் நிர்வாகம் கோவிலில் இவ் வீரர்களுக்கான வழிபாடுகளை செய்து, அம்மனுக்கு சாத்திய பட்டு ஆடைகளை வீரர்களுக்கு போர்த்தி ஒவ்வொரு வீரர்களும் கௌரவிக்கப்பட்டார்கள்.
இலங்கை கடலால் சூழப்பட்ட தீவு ஆனால் தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்குபெறும் வீரர்கள் எண்ணிக்கை மிக குறைவான அளவே காணப்படுகிறது. எம் பிள்ளைகள் இத் துறைகளிலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் இது போன்ற போட்டிகள், பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். எதிர்வரும் காலங்களில் நாம் பல நிகழ்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளோம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இத்துறையிலும் ஈடுபடுத்த முன்வர வேண்டும். இலங்கையின் விளையாட்டு துறையில் அதிகளவு வாய்ப்பு நீரால் கிடைப்பதற்கு இயற்கை வாய்ப்பாக தந்துள்ளது.
இப்போட்டிகள் SDG 03 இன் இலக்கை அடிப்படையிலும் செயல்படுத்தப்படுகிறது. SDG 3 என்பது “நிலையான வளர்ச்சி இலக்கு 3” என்பதன் சுருக்கம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான 2030 நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக 2015 இல் ஐக்கிய நாடுகள் சபையால் நிர்ணயிக்கப்பட்ட 17 இலக்குகளில் ஒன்றாகும். SDG 3 அனைத்து வயதினருக்கும் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது, சுகாதார விளைவுகளை மேம்படுத்துதல், நோய்களின் சுமையைக் குறைத்தல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
இன் நிகழ்வில் Tinco Aid சார்பில் பணிப்பாளர் திருமதி. தயாளினி ஹரிகரன், நிறுவனர் திரு. இராஜக்கோன் ஹரிகரன், நிகழ்ச்சி முகாமையாளர் திரு. சங்கரலிங்கம் நவநீதன் ஆகியோரும் திரு. நந்தன விஜயலால் (Yana Foundation Director), பயிற்சியாளர்கள், Trinco Blue Water Sports, பெற்றோர்கள், தன்னார்வலர்கள், படகு உதவியாளர், கிராம மக்கள் மற்றும் பலர் கலந்து இப்போட்டியினை சிறப்புற நாடாத்த உதவினர்.