(ஏறாவூர் நிருபர்- நாஸர்)
வழக்கு விசாரணையின்போது நீதிமன்றம் அனைவரையும் சமமாகவே மதிக்கும் என மட்டக்களப்பு மேலதிக நீதிபதியும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியுமான எஸ். அன்வர் சாதாத் 02.08.2023 தெரிவித்தார்.
சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்வதற்கும் தமது பக்க நியாயங்களை முன்வைப்பதற்கு எதிரிக்கு போதுமான சந்தர்ப்பத்தை மன்று வழங்குமெனவும் அவர் கூறினார்.
பாடசாலை மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை ஏற்படுத்தியமை தொடர்பாக ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையின்போது நீதிபதி இக்கருத்தினைக் குறிப்பிடார்.
மட்டக்களப்பு -ஏறாவூர் பிரதேசத்திலுள்ள பெண்கள் உயர்தர பாடசாலையொன்றில் ஆங்கில பாடம் கற்பித்த ஆசிரியர் ஒருவர் 29 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஏற்படுத்தியதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை இரண்டாவது நாளாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மேலதிக நீதிபதியும் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியுமான எஸ். அன்வர் சாதாத் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது.
மட்டக்களப்பு மேலதிக நீதிபதியும் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியுமான எஸ். அன்வர் சாதாத் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது.
இவ்வழக்கில் மாணவிகள் ஆசிரியைகள் , அதிபர் மற்றும் பிரதி அதிபர் உட்பட நாற்பது பேருக்கு சாட்சியமளிப்பதற்கு நீதிமன்றினால் அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.
சாட்சியங்கள் கட்டம் கட்டமாக பதிவு செய்யப்படுகிறன. முதலாம் நாள் ஐவரது சாட்சியங்களும் இரண்டாம் நாள் பத்துப்பேரது சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டன.
சாட்சியங்கள் கட்டம் கட்டமாக பதிவு செய்யப்படுகிறன. முதலாம் நாள் ஐவரது சாட்சியங்களும் இரண்டாம் நாள் பத்துப்பேரது சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டன.
சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகவில்லை. இதனைக் கருத்திற்கொண்டு ஒவ்வொரு சாட்சியமும் பதிவுசெய்யப்பட்டதையடுத்து சாட்சியைக் குறுக்குக் கேள்விகேட்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
எனினும் சந்தேக நபர் மௌனமாகவே நின்றார். இதனால் நீதிபதி சந்தேக நபருக்கு அறிவுரை வழங்கினார். ‘இவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட முன்னரே சட்டத்தரணியை அமர்த்துவதற்கு தங்களுக்கு இரண்டு வாரகால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் நீங்கள் சட்டத்தரணிகள் எவரையும் அமர்த்தவில்லை. இன்னும் உங்களுக்கு சந்தர்ப்பம் வழங்க முடியும். சட்டத்தரணியை அமர்த்துங்கள் அல்லது சாட்சிகளை குறுக்கேள்வி கேட்டு உங்களது நியாயங்களை மன்றிற்குத் தெரிவியுங்கள். தனிப்பட்டமுறையில் எவரையும் குற்றவாளியாகக் காண்பதற்கு நீதிமன்றிற்கு அவசியமில்லை என்றார். எனவே அடுத்த கட்ட விசாரணையின்போது சட்டத்தரணியை அமர்த்துமாறு நீதிபதி கேட்டுக்கொண்டார்.
பாடசாலை மாணவிகள் சீருடையில் மன்றிற்கு சமுகமளித்திருந்தனர். தங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் மற்றும் பாலியல் தொல்லை தொடர்பாக வாக்குமூலம் அளித்தனர்.
குறித்த பாடசாலையில் 2019 ஆம் ஆண்டு தரம் ஏழு வகுப்பு பி பிரிவில் கல்விகற்ற மாணவிகள்மீது ஆங்கில பாடம் கற்பித்த ஆசிரியர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக மட்டக்களப்பு பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினால் ஏலவே நீதிமன்றிற்கு பி அறிக்கை சமர்ப்பித்திருந்தது.
அண்மையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
நீதிமன்றில் கதவுகள் மூடப்பட்ட நிலையில் மாணவிகளிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஏறாவூர்ப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இவ்வழக்கு விசாரணையினை அறிவதற்கென நீதிமன்ற வளாகத்தில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கூடிநின்றனர். மாணவிகள் மற்றும் ஆசிரியைகளும் இங்கு சந்தேகநபரைஅடையாளங்காட்டினர்.