நாளை கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்  திருக்கோவில் திருவிழாவில்.

( வி.ரி.சகாதேவராஜா)    கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்  நாளை 3 ஆம் தேதி வியாழக்கிழமை வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் சித்திரவேலாயுதசுவாமி ஆலய ஆடி அமாவாசை உற்சவ திருவிழாவில் கலந்து கொள்ளவிருக்கிறார்.
திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலய பரிபாலன சபையின் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் தலைமையிலான குழுவினருக்கும், ஆளுநருக்கும் இடையில் கடந்த (20) வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது உறுதியளித்ததற்கமைவாக ஆளுநர் இந்த விஜயத்தை மேற்கொள்கிறார்.
கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி எம். கோபாலரெத்தினம் , திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன், இந்துசமய ஆர்வலரான வி.ரி.சகாதேவராஜா, ஆகியோரும் உடன் வருகைதரவுள்ளனர்.
வியாழக்கிழமை இரவுத் திருவிழாவில் கலந்து கொள்ளும் ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆலய அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலய வருடாந்த ஆடி அமாவாசை உற்சவம் கடந 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. ஆகஸ்ட் 16 ஆம் தேதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.