எஸ்.சபேசன்
திட்டமிட்ட குடியேற்றத்தினால் கிழக்குமாகாணத்தில் தமிழ்மக்களின் விகிதாசாரம் குறைந்து வருகிறது
அரசாங்கத்தின் திட்டமிட்ட குடியேற்றத்தினால் கிழக்கு மாகாணத்தின்தமிழ்மக்களின் விகிதாசாரம் குறைந்து வருவதுடன் ஏனைய சமூகத்தின்
விகிதாசாரம் அதிகரிக்கப்பட்டு வருகின்றது. என மட்டக்களப்பு மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார் துறைநீலாவணையில் தமிழரசுக்கட்சியின் வட்டாரக்கிளையின் ஏற்பாட்டில் கறுப்பு யூலை தின நிகழ்வு வட்டாரக்கிளையின் தலைவர் த.கணேசமூர்த்தி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மாலைநடைபெற்றபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன் ஞா.சிறிநேசன்உட்பட தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துசிறப்பித்தனர். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் இந்தியா அரசாங்கத்தின்முயற்சியினால் வழங்கப்பட்ட மாகாணசபை அதிரிகாரங்களை சரியாகநடைமுறைப்படுத்தமுடியாத அளவிற்கு இந் நாட்டில் ஆட்சிபீடம் ஏறுகின்ற பேரினவாத அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இந்த
அதிகாரத்தில் பொலிஸ் காணி அதிகாரங்கள் வழங்கப்படாவிட்டால்மாகாணசபை அதிகாரங்களில் எவ்வித பிரயோசனமும் இல்லைஅண்மையில் எமது கட்சித்தலைமை உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களை ஜனாதிபதி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியபோது காணி பொலிஸ் அதிகாரங்கள் இல்லாத தீர்வு
எமக்குத் தேவையில்லை என்ற விடயத்தினை ஜனாதிபதிக்கு எமது தலைவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
1983 இல் நடந்த யூலைக்கலவரம் போல் இன்றோ நாளையோதமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படாலம் இவ்வாறு நடந்தால்
எமது மக்களை எப்படிக் காப்பாற்றுவது என்பது தொடர்பாகத்தமிழரசுக் கட்சி பல பிரயத்தனங்களை எடுக்கவேண்டியுள்ளதுஇதற்காக தமிழரசுக்கட்சியினைப் பலப்படுத்துவது உங்களது கைகளில்தான் இருக்கின்றது.
இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி போடுகின்ற பிச்சைகளை
எடுத்துக் கொண்டு இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள்தமிழர்களுக்கு எதிராக பிரச்சினைகள் எழும்போது ஜனாதிபதிக்குஎதிராக பேசமாட்டார்கள் அவர்களது கைப் பொம்மைகளாகசெய்வதெல்லாம் சரி என்ற நிலையில் இருக்கும் நிலையே ஏற்படும்என்பதனை தமிழ்மக்கள் சிந்தித்துப்பாருங்கள் எமதுஇனத்தினைப்பாதுகாக்கக் கூடியவர்கள் தமிழரசுக்கட்சியே என்பதில்எவ்வித ஐயமும்இல்லை.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பொலிஸார் பொங்கல் பானைகளைக் கூடகாலால் உதைத்துத்தள்ளினர் இதனைச் செய்வதற்கு உத்தரவு இட்டதுயார் இந்த அரசாங்கந்தானே இதனை ஜனாதிபதியிடம் கேட்டபோதுஎமக்குத் தெரியாது அதனைப் பொலிஸாரே செய்துள்ளனர் எள்றார்
இவ்வாறுதான் இன்றைய நிலை இருந்து கொண்டிருக்கின்றதுதமிழரசுக்கட்
இல்லாமல் இருக்கின்றன. இதனை எங்களுக்குத்தந்தால் எமதுபிரதேசத்தினை நாமே அபிவிருத்தி செய்திருப்போம் கடந்த காலங்களில்
கம்ரெலியத் திட்டத்தினூடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பலவீதிகளை எமது பாராளுமன்ற உறுப்பினர்களினால்அபிவிருத்தி செய்யப்பட்டது இன்று மூன்று வருடம் கடந்தும் எவ்விதஅபிவிருத்தியும் அரச பாராளுமன்ற உறுப்பினர்களால் செய்யவில்லைஎன்றார்