இலங்கை கிரிக்கெட் நடுவர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களக்கு புலவர்மணியில் பாராட்டு

இலங்கை கிரிக்கெட் நடுவர் போட்டிப் பரீட்சையில் (தரம் 5) சித்தியடைந்த மருதமுனையை சேர்ந்த நடுவர்களை பாராட்டி கெளரவிக்கின்ற நிகழ்வு பெரியநீலாவணை புலவர்மணி சரிபுத்தீன் மஹா வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் ஏ.முஹம்மட் அன்சார் தலைமையில் (31) நடைபெற்றது.

மருதமுனையைச் சேர்ந்த சூடான் நாட்டில் பணிபுரியும் UN – IOM நிறுவனத்தின் நிகழ்சித் திட்ட அதிகாரி எம்.றினாஸ் செய்னுலாப்தீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். நடுவர் பரீட்சையில் சித்தியடைந்த எம்.என். முஹம்மட் நாஜித், ஏ.டபிள்யூ.றிஸ்வி மஹ்மூத், எம்.எஸ்.எம்.சிராஸ் ஆகியோர் பாடசாலை அழைக்கப்பட்டு மாணவர்களுக்கு முன்னிலையில் பொன்னாடை போர்த்தி சான்றிதழ் வழங்கி பாராட்டி கெளரவிக்கப்பட்டார்கள்.