வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக்குமுவின் ஏற்பாட்டில் தமிழ் பேசும் மக்களுக்குரிய நிரந்தர அரசியல் தீர்வான சமஷ்டியை வலியுறுத்தி இன்று காலை (31) திருகோணமலை நகரசபையை அண்மித்த பகுதியில் அமைதியான முறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.
நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிய செயல்முனைவின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு இந்த ஜனநாயகப் போராட்டம் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.