இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி மட்டக்களப்பு மாவட்ட புதிய நிர்வாக தெரிவு

தமிழரசுக் கட்சியின் 73 ஆண்டு கால வரலாற்றில் முதல் முதலாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உந்துதலில் இடம்பெற்ற இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி மட்டக்களப்பு மாவட்ட புதிய நிர்வாக தெரிவு இன்றைய தினம் இடம்பெற்றது.

இராசமாணிக்கம் சாணக்கியனின் முழு முயற்சியில் மட்டக்களப்பில் வட்டாரக்கிளை, பிரதேசக்கிளை மற்றும் தொகுதிக்கிளை முறையே அமைக்கப்பட்டு மாவட்ட நிர்வாக தெரிவு இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்ட இலங்கைத்தமிழரசு கட்சி தலைவர் குகதாசன், செல்வேந்திரன், நடராசா, மற்றும் மண்முனை தென்மேற்கு பிரதேச முன்னாள் தவிசாளர் சி.புஷ்பலிங்கம் ஆகியோரின் முன்னிலையில் இடம்பெற்றது.

1.தலைவராக : இரா.சாணக்கியன் பா.உ,
2.செயலாளராக:ஞா.ஶ்ரீநேசன்,மு.பா.உ,
3.பொருளாளராக:சீ.யோகேஷ்வரன். மு.பா.உ,
4.உபதலைவராக:பா.அரியநேத்திரன், மு.பா.உ
5.உப செயலாளராக: தி.சரவணபவான், மு.மா.முதல்வர்.

மற்றும் 10 நிர்வாக உறுப்பினர்கள் இதன்போது தெரிவானார்கள்.