சர்வதேச அபாகஸ் போட்டிக்கு 14 மாணவரகள் ஜப்பான் பயணம்

ஜப்பானின் டோக்கியோவில் இடம்பெறுகின்ற சர்வதேச அபாகஸ் போட்டியில் பங்குபற்றுவதற்காக இலங்கையில் இருந்து 14 மாணவரகள் ஜப்பான் பயணமாகியுள்ளனர்.

ஐகேம் அபாகஸ் (ICAM Abacus) நிறுவனத்தின் ஏழாவது தேசிய அபாகஸ் போட்டியில் சித்தியடைந்தவர்களே இவ்வாறு ஜப்பான் சென்றுள்ளனர்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை (29) கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மேற்படி நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி ஏ.என். பாத்திமா சுக்ரா ஷாபி தலைமையில் இம்மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.