ஆற்றுக்குள் பாய்ந்த மீன் லாறி

அம்பாந்தோட்டையிலிருந்து காரைதீவு மாளிகைக்காட்டிற்கு மீன் ஏற்றி கொண்டு வந்த வட்டா ரக லொறி
காரைதீவில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து நேற்று(29) சனிக்கிழமை அதி காலை மூன்று மணி அளவில் காரைதீவு பெரிய பாலத்தில் இடம் பெற்றது.

பாலத்தின் கம்பிகளை உடைத்து கொண்டு ஆற்றுக்குள் பாய்ந்த லொறியில் இருந்து மீன் பெட்டிகள் சிதறுண்டன.

மாளிகைக்காட்டைச் சேர்ந்த ஏ.எம்.பைஷால் என்பவரின் பட்டா ரக லொறியே இவ்விதம் ஆற்றுக்குள் பாய்ந்தது. தெய்வாதீனமாக உயிருக்கு ஆபத்தில்லை.

காரைதீவு பொலிசார் ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.