காத்தான்குடியில் சமூக அடிப்படையிலான மாற்றுவழி பிணக்குத் தீர்வு பொறிமுறையின் கீழ் சமுதாய சனசமூக மத்தியஸ்த சபைகள் நிறுவுவதற்கான அவை உறுப்பினர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தலைமையில் மத்தியஸ்த சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். ஹிஸ்புள்ளாஹ் வின் ஒருங்கிணைப்பில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மடக்களப்பு மாவட்ட நீதிபதி எச்.எம்.முஹம்மது பஸீல் கலந்து கொண்டதுடன்
மாவட்ட மத்தியஸ்த பயிற்சி உத்தியோகத்தர் எம். ஐ . எம். ஆஸாத்தின் ஆதரவுடன் கடிதங்கள் வழங்கப்பட்டன..
இம்மத்தியஸ்த சபையில் 14 பெண்களும் 20 ஆண்களுமாக 34 உறுப்பினர்கள் நியமனம் பெற்றனர். அதில் சபையின் தவிசாளராக எம். எம். எம். மஃசூம், உப தவிசாளராக முபீதா றமீஸ் ஆகியோர் நியமனம் பெற்றனர்.
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா, கணக்காளர் கே.சித்திரா, நகரசபை செயலாளர் ரிப்கா ஷபீன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர் .