கல்முனை வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி 26 முதலிடங்கள் பெற்று சாதனை
(அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை மைதானத்தில் கடந்த 24,25 ஆம் திகதிகளில் இடம்பெற்றது.
இவ் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவர்கள் 14 வயதிற்குட்பட்ட 60 மீற்றர் ஓட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தையும்,16 வயதிற்குட்பட்ட உயரம் பாய்தல், 200 மீற்றர் ஓட்டம், 4 x 100 மீற்றர் அஞ்சலோட்டம் ஆகியவற்றில் முதலாமிடத்தையும், 110 மீற்றர் தடைதாண்டலில் இரண்டாமிடத்தையும், 18 வயதிற்குட்பட்ட 400 மீற்றர் ஓட்டம், 4 x 100 மீற்றர் ஆகியவற்றில் முதலாமிடத்தையும், 100 மீற்றர், 400 மீற்றர் ஆகியவற்றில் இரண்டாமிடத்தையும், 20 வயதிற்குட்பட்ட 100 மீற்றர், 200 மீற்றர், 400 மீற்றர், உயரம் பாய்தல், 400 மீற்றர் தடை தாண்டல், 4 x 100 மீற்றர் அஞ்சல், 4 x 400 மீற்றர் அஞ்சல் ஆகியவற்றில் முதலிடங்களைப் பெற்றுக் கொண்டது.
மேற்படி போட்டியில் 26 முதலிடங்களையும், 4 இரண்டாம் இடங்களையும் பெற்று நடைபெறவுள்ள கிழக்கு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பினை பெற்றுள்ளனர்.