நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்  பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் தலைமையில்  நடைபெற்றது.

(றாசிக் நபாயிஸ்)
நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் தலைமையில் (27) நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்
நடைபெற்றது.
பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம்.அப்துல் லத்தீப் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
எம்.சி.பைசல் காசீம்,  நிந்தவூர்  பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், பாதுகாப்புத் தரப்பினர், பள்ளிவாசல் தலைவர்கள், சமூக அமைப்புக்களின் பிரதானிகள் மற்றும் அரச அதிகாரிகள்
பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்வருடத்தில் நிந்தவூர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கல்வி, சுகாதாரம், வீதி அபிவிருத்தி, விவசாயம், நீர்ப்பாசனம், கடலரிப்பு மற்றும் கட்டுமான வேலைத்திட்டங்கள், செயற்றிட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அதற்கான அனுமதியும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுவினால் வழங்கப்பட்டது.
2023.03.17ஆம் திகதி நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாகவும் பேசப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது
வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் அசமந்தமான போக்கினால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற் காணிகளை யானை துவம்சம் செய்து வருவதாகவும் இங்கு பலரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அவர்கள்  வனஜீவராசிகள் அதிகாரிகளின் அசமந்தப் போக்கை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும், விவசாய நெல் உற்பத்தியை யானைகளின் அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக  அவர்களது சொந்த செலவில் விவசாயிகள் மேற்கொண்டு வரும் மின்சார யானை வேலி அமைக்கும் செயற்பாடுகளுக்கு  வன ஜீவராசிகள் அதிகாரிகள் முழுமையான ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென உத்தரவிட்டார்.
இதன்போது நிந்தவூர் விவசாய அமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட செயற்றிட்டங்களான
3.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மின்சார யானை வேலி மற்றும் அதற்கான
கட்டுப்பாடு நிலையம் அமைத்தல் தொடர்பாகவும்
கலந்துரையாடப்பட்டது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலும் இதனை தாண்டி நிந்தவூர்
விவாசாயிகளின் அனைவரினதும்
பங்குபற்றுதல் மற்றும் ஒத்துழைப்புடன் மின்சார வேலி அமைக்க 65 லட்சம் பணம் திரட்டப்பட்டுள்ளது மிகவும் வரவேற்கத்தக்க விடயம். அதனை துரிதமாக உரிய இடத்தில் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டதுடன் வேறு ஒரு பகுதியிலும் இவ்வாறு மக்களின் பங்களிப்புடன் இப்படியான செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவில்லை என நான் எண்ணுகின்றேன்,
இது ஒரு முன்மாதிரியான வேலைத்திட்டம் என தவிசாளர் எஸ்.எம்.எம். முஷாரப் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் புகழாரம்.
ஒலுவில் துறைமுக அபிவிருத்தி முன்னெடுப்பினால் நிந்தவூர் பிரதேசத்தில் கடலரிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு வாழ்வாதார நிவாரணத்தை வழங்குவதற்கு அரசாங்கத்தை வலியுறுத்தும் தீர்மானமும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
மேலும், ஒலுவில் துறைமுகம் இயக்கப்படாமல் சிலரின்  தேவைக்காகப் பயன்படுத்தப்படுவது எல்லோரும் அறிந்த விடயமாகும். அவ்வாறு ஒலுவில் துறைமுகம் இயங்காவிட்டால் அதற்காகப் போடப்பட்ட தரைக்கற்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பாாளுமன்ற உறுப்பினர் பைசல் காசீம் இங்கு கருத்துத் தெரிவித்தார்.
நிந்தவூர் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் அவர்களினால் முன்வைக்கப்பட்ட புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பெண் நோயாளர் விடுதி மற்றும் உடற்பயிற்சி சிகிச்சை நோயாளர் விடுதிகளுக்கு பொருட்கள் வழங்குதல் தொடர்பாகவும் நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை பணிப்பாளர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலைக்கு (தொற்றா நோய்) நிரந்தர கட்டிடம் கிடைக்கும் வரை நெற்சந்தைப்படுத்தல் களஞ்சியசாலையை தற்காலிகமாக பயன்படுத்த அனுமதி கோரல் தொடர்பாகவும், நிந்தவூர் மத்தியஸ்த சபையின் தவிசாளர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட நிந்தவூர் மத்தியஸ்த சபைக்கு நிரந்தர கட்டிடம் அமைக்க கோரல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
அபிவிருத்தி திட்டங்களுக்கு அரசிடம் எந்தவிதமான நிதி ஒதுக்கீடும் இல்லாத இந்த நேரத்தில் அதனை தவிர்த்து பொதுவான பிரச்சினைகளை சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் தவிசாளர் கருத்து தெரிவித்தார்.
பிரதான வீதியில் புதிய
வைத்தியசாலை அமைப்பதற்கான காணி
வாங்குவதற்கு நிந்தவூர்
மக்களின் பங்களிப்பாக
ஒரு கோடியே 75 லட்சம் கிடைத்ததை பாராளுமன்ற உறுப்பினர் எம்.சி.பைஸால் காசிம் நினைவூட்டினார்.
அஸ்வெசும
தேசிய கொள்கை
செயற்றிட்டத்தின் ஊடாக
உண்மையான
பயனாளிகள் தெரிவு செய்வதற்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பணி
அபரிதமானது எனவும் அவர்களின் தெரிவு மக்களின் தகவலை வைத்தே தெரிவுகள் நடந்ததாகவும்
பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.சுல்பிகார் கருத்து தெரிவித்தார்.
மேலும் சமுதாய பராமரிப்பு நிலையம் அமைத்தல், அட்டப்பள்ளம் கிளினிக் நிலையத்திற்கு எல்லைச் சுவர் அமைத்தல், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலையத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் அறை அமைத்தல், முன்னரன் அமைத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
போதைவஸ்து பாவனை மற்றும் விற்பனையைத் தடுத்தல், கமநல சேவைகள் மத்திய நிலையத்திற்கு யானை வெடி பெற்றுத்தரக் கோரல்,
நிந்தவூர் நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியத்தை புணரமைத்தல் அத்துடன் இப்போக நெல் கொள்வனவுக்கு ஏற்பாடு செய்தல் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

FB_IMG_1690517801910.jpgFB_IMG_1690517793521.jpgFB_IMG_1690517849888.jpgFB_IMG_1690517781832.jpgFB_IMG_1690517837063.jpgFB_IMG_1690517822448.jpgFB_IMG_1690517797589.jpgFB_IMG_1690517846004.jpgIMG-20230727-WA0062.jpgIMG-20230727-WA0051.jpgIMG-20230727-WA0045.jpgIMG-20230727-WA0061.jpg