பிரதேச மட்ட போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சிறுவர், பெண்கள் அபிவிருத்தி கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் 2023 கோறளைப்பற்று வாழைச்சேனைப் பிரதேசத்தின் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சிறுவர், பெண்கள் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் (25 ) செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஜெயக்குமார் புனிதநாயகி தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடல் துறை சார் உத்தியோகத்தர்கள் பலரின் பங்கு பற்றலுடன் நடைபெற்றது.

இதில் முதல் இரண்டு காலாண்டுக்கான செயலக போதைப்பொருள் மற்றும் சிறுவர் பெண்கள் வேலைத்திட்டங்கள் சம்பந்தமாக துறைசார் அதிகாரிகளால் தெளிவுபடுத்தப்பட்டது.

போதைப்பொருள் ஒழிப்புச் செயற்பாடுகளின் போது எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த அனுபவங்கள், அதற்கான முன்னேற்றங்களின் அவசியம், பிரச்சினைகள் தொடர்பாகவும் அதற்கான தீர்வு தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது .