கிரான் மத்திய கல்லூரியில் மாணவர் சட்ட மன்றம் அங்குராரர்ப்பணம்.

(ருத்திரன்) கிரான் மத்திய கல்லூரியில் மாணவர் சட்ட மன்றம் அங்குராரர்ப்பணம் செய்தல் மற்றும் அறிமுக பயிற்சி நிகழ்வும் கல்லூரியின் அதிபர் மா.தவராஜா அவர்களின் தலைமையில் மற்றும் பழைய மாணவர் அமைப்பின் தலைவர் சி.சுகிதரனின் வரவேற்புடன் இன்று இனிதே (26) இடம்பெற்றது.அதிதிகள் மலர் மாலை அணிவித்து மாணவர்களினால் வரவேற்கப்பட்டனர்.மங்கள விளக்கேற்றல் நிகழ்வு இடம்பெற்றது.
  • பிரதம அதிதி மேல்நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் அவர்களினால் மாணவர் சட்ட மன்றம் அங்குராரர்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.யாழ்ப்பானம் பல்கலைக் கழக சட்ட பீட விரிவுரையாளர் சட்டத்தரணி திருமதி சுபாசினி ருமணன் சட்டம் தொடர்பான அறிமுகத்தை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினார்.பிரதம அதிதி பொன்னாடை போர்த்தி கௌரவிக்க்பட்டார்.தொடர்ந்து அவர் சட்டம் தொடர்பாக மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாக உரையாற்றினார். குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் கௌரவ அதிதிகளாக கல்குடா வலயக் கல்விப பணிப்பாளர்,த.அனந்தரூபன்,பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜெயவதனன்,சிறப்பு அதிதியாக கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவு,சட்டத்தரணி திருமதி சுபாசினி ருமணன், மற்றும் கிரான் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர். வரலாற்றில் முதன் முதலாக இவ் நிகழ்வு மேற்படி கல்லூரியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.