(ஸ்ஹர் இப்றாஹிம்) சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் தேசிய பாடசாலை க.பொ.த.உயர்தர மாணவர்களுக்கான முன்னேற்ற அறிக்கை வழங்குதலும், பரிசளிப்பும் ,பெற்றோர் கூட்டமும்.
சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் தேசிய பாடசாலையில் க.பொ.த. உயர்தர வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான நடந்து முடிந்த தவணை பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் முன்னேற்ற அறிக்கைகள் வழங்கப்பட்டு சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் கௌரவிப்புகளும் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் றிப்கா அன்ஸார் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பிரதி அதிபர் ஏ.எல்.எம்.தன்ஸீர், பகுதித் தலைவர் ஏ.எம்.அஜ்வத், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோரும் கலந்து கொண்டனர்.