திருமணமான உலக அழகியாக  அம்பாறையைச் சேர்ந்த  சஷ்மி  திஸாநாயக தெரிவு. 

(அஸ்ஹர்  இப்றாஹிம்)    மிஸிஸ் எர்த் இன்டர்நேஷனல் 2023 பட்டத்தை அம்பாறையை சேர்ந்த 21 வயதான சஷ்மி திஸாநாயக்க வென்றுள்ளார்.
45 நாடுகளைச் சேர்ந்த 60 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த போட்டி இம்மாதம்  17 முதல் 22 வரை பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்றுள்ளது.
இந்த போட்டி நிகழ்வில் இலங்கையைப் பிரதிநிதிதுவப்படுத்திய சஷ்மி திஸாநாயக்க 04  துணைப் போட்டிகளை வென்று திருமணமான உலக அழகியாக கிரீடத்தை வென்றுள்ளார்.