(கனகராசா சரவணன்)
காத்தான்குடியில் ஜஸ் போதை பொருளுடன் ஒருவரை நேற்ற புதன்கிழமை (26) இரவு கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் சம்பவதினமான நேற்று இரவு காத்தான்குடி 6 ம்பிரிவு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரை 2 கிராம் 130 மில்லிக்கிராம் ஜஸ்போதை பொருளுடன் கைது செய்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.