ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கான புதிய கட்டிட தொகுதி மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்வும் காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வும் இடம் பெற்றது.
இதன் போது காகிதநகர் கிராம சேவகர் பிரிவில் அரச காணியை பராமரித்து வந்தவர்களுக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்கப்பட்டதுடன் மா மரக்கன்றுகளும் நடப்பட்டது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக சுற்றாடல் அமைச்சரும், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான ஹாபீஸ் நஷீர் அஹமட் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக முன்னால் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டனர்.
மேலும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், ஏறாவூர் பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜுத் ஆகியோர் கலந்து கொண்டதுடன் திணைக்கள தலைவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட்டின் இணைப்பு செயலாளர் ஏ.ஏ.நாஸர், கல்குடா தொகுதி இணைப்பாளர் எம்.ஜவாத் மற்றும் பொதுமக்கள்கள் என பலரும் கலந்து கொண்டனர்.