தேசிய கராத்தே போட்டிக்கு தெரிவான வவுனியா மாவட்ட IMA மாணவர்கள். 

(அஸ்ஹர் இப்றாஹிம்)  ஸ்ரீ லங்கா கராத்தே சம்மேளனத்தின் வட மாகாணத்திற்கான மாகாண மற்றும் மாவட்ட கராத்தே போட்டிகள் கடந்த வாரம்  கிளிநொச்சியில் நடைபெற்றது.
இப்போட்டியில் International Martial arts Association யின் வவுனியா மாவட்ட கிளை மாணவர்கள் பங்குபற்றி 34 பதக்கங்களைப் பெற்று தேசிய கராத்தே போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
13 வயதுக்கு கீழ் மாவட்ட மட்ட போட்டியில் 10 மாணவர்கள் பங்குபற்றி   12 தங்க பதக்கங்களையும் 08 வெள்ளி பதக்கங்களையும் 04 வெண்கல பதக்கங்களையும் மொத்தமாக ’24’ பதக்கங்களை வென்றுள்ளனர்.
மாகாண மட்ட போட்டியில் 14 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் பிரிவில் 09 பேர் பங்குபற்றி  03 தங்க பதக்கங்களையும் 04 வெள்ளி பதக்கங்களையும் 03 வெண்கல பதக்கங்களையும், மொத்தமாக ’10’ பதக்கங்களையும் வென்றுள்ளனர்.