தாந்தாமலையானை நோக்கி பாதையாத்திரையாக படையெடுத்த எருவில் மக்கள்.(Video)

(எருவில் துசி) தாந்தாமலை முருகன் ஆலயத்தில்  எருவில் மக்களின் திருவிழா இன்று(26) எருவில் கண்ணகி அம்மன் ஆலயத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.

திருவிழாவினை சிறப்பிக்கும் முகமாக 1000ற்கும் மேற்பட்ட மக்கள் பாதயாத்திரையாக தாந்தாமலையானின் அருள் வேண்டி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாதயாத்திரையாக சென்ற மக்களுக்கு 40ம் கிராமத்தை சேர்ந்த கந்தப்போடி என்பவரின் ஏற்பாட்டில் 40ம் கிராம மாரியம்மன் ஆலயத்தில் பாதயாத்தரையாக சென்ற அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டமை சிறப்புக்குரியதாகும். அவருக்கு எருவில் பாதயாத்திரை குழுவினர் நன்றி தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது. இன்று(26) இரவு எருவில் கிராம மக்களினால் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் திருவிழா பக்திபூர்வமாக நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.