தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்ப பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

கொழும்பு புறக்கோட்டை இந்து இளைஞர் நற்பணி மன்றத்தினால் அண்மையில் இராகலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் வாழும் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு புத்தகப்பை, அப்பியாச கொப்பிகள், பாதணிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் என்பன அதன் தலைவர் சுரேஷ் மற்றும் நிர்வாக குழுவினரால் வழங்கி வைக்கப்பட்டன.